கடன் வாங்கியோர் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சில தவிர்க்க முடியாத சில சமயங்களில் கடனை செலுத்த முடியாமல் தவித்திருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் கடன் கொடுத்த நிறுவனங்கள் அல்லாமல் மூன்றாம் தரப்பினர் கடனை வசூலித்திருக்கலாம்.
கடன் வசூலிக்கும் போது மூன்றாம் தரப்பு நபர்களை பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்க கூடாது. மறு உத்தரவு வரும் வரை அதனை தொடர வேண்டும் என மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க திட்டமா.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான அறிவிப்ப பாருங்க!
ஊழியர்கள் வசூலிக்க தடை இல்லை
எனினும் தங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை கொண்டு, கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்க தடையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிராக்டர் வாங்கிய விவசாயி
ஜார்கண்ட் மாவட்டம், ஹசாரிபார்க் மாவட்டத்தில் விவசாயி மஹிந்திரா நிதி நிறுவனத்தின் மூலம் டிராக்டர் ஒன்றை வாங்கியிருந்தார்.. அவர் தவணையாக செலுத்த வேண்டிய நிலுவை தொகையாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிகின்றது. இந்த தொகையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தன்னிடம் இருப்பதாகவும், மீதமுள்ள 10,000 ரூபாய் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விவசாயிடம் அராஜகம்
எனினும் விவசாயிடம் மிக மோசமாக நடந்து கொண்டுள்ள மூன்றாம் தரப்பு நபர்கள், டிராக்டரை வலுக்கட்டாயமாக ஒட்டிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அப்போது அந்த விவசாயின் மகள் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரப்பரைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடன் வசூலிப்பு ஏஜெண்டாக செயல்பட்ட ரோஷன் சிங்கை கைது செய்துள்ளது.
ஆன்லைன் ஆப்களுக்கும் எச்சரிக்கை
இத்தகைய சம்பவத்திற்கு மத்தியில் தான் தற்போது ரிசர்வ் வங்கி இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அது மட்டும் அல்ல, ஆன்லைன் கடன் நிறுவனங்களுக்கும், கடன் வசூலிப்பு அராஜகங்களுக்கும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளது.
விசாரிப்போம்
மஹிந்திரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் அனிஷ் ஷா, இந்த சம்பவத்தினை அனைத்து கோணங்களிலிருந்தும் நாங்கள் விசாரிப்போம். மேலும் தற்போதுள்ள மூன்றாம் தரப்பு சேகரிப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையும் ஆய்வு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
முன்னணி நிதி நிறுவனம்
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா ஃபைனான்ஸ், இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத ஒரு நிதி நிறுவனமாகும். கிராமப்புற மற்றும் செமி அர்பன் துறைகளில் கவனம் செலுத்தும் நிறுவனம் 8.1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 11 பில்லியனுக்கும் அதிகமான AUMஐ கொண்டுள்ளது.
RBI directs Mahindra Finance not to use third party persons for debt collection
RBI directs Mahindra Finance not to use third party persons for debt collection