சர்வதேச சந்தையில் நுழையும் ஓலா எலக்ட்ரிக் வாகனம்.. முதல் நாடு இதுதான்!

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஓலா என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்தியாவை தாண்டி சர்வதேச சந்தையில் ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முதல்கட்டமாக ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள்

ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தி வரும் நிலையில் சர்வதேச சந்தைகளில் நுழைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் அதன் பிரபலமான ஓலா S1 ஸ்கூட்டர்களை உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலம் நேபாளத்தில் உள்ள CG மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நேபாளத்தில் ஓலா ஸ்கூட்டர்கள்

நேபாளத்தில் ஓலா ஸ்கூட்டர்கள்

இந்த ஒப்பந்தம் காரணமாக ஓலா ஸ்கூட்டர்கள் அடுத்த காலாண்டில் நேபாளத்தில் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் மேலும் 5 நாடுகளுக்கு ஓலா எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் வாகன புரட்சி
 

எலக்ட்ரிக் வாகன புரட்சி

இதுகுறித்து ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியபோது, ‘உலகளாவிய எலக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி இதுவரை மேற்கு நாடுகள் மற்றும் சீனாவால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த புரட்சியில் இந்தியாவும் கலந்து கொள்ளும் என்று கூறினார்.

இந்திய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள்

இந்திய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள்

மேலும் உலக நாடுகளுக்கு தேவைப்படும் எலக்ட்ரிக் வாகனங்களில் பாதியை இந்தியாவிலேயே உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதற்கும் தேவையான எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்ற முன்னுதாரணத்தை உருவாக்க ஓலா உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார்.

சர்வதேச விரிவாக்கம்

சர்வதேச விரிவாக்கம்

எங்கள் நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கம் என்பது உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது மட்டுமல்லாமல், உலகிற்கு இந்தியா எலக்ட்ரிக் வாகன புரட்சியை வழிநடத்தும் என்பதற்கு உதாரணமாக எங்கள் நிறுவனம் இருக்கும் என்று பவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

 சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

கடந்த ஆண்டு ஓலா சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை மாற்றியமைத்து, எதிர்காலத்தில் இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இயங்குவதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றும் பணியை மேற்கொண்டது. ஓலா உலகின் மிகப்பெரிய இருசக்கர எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola Electric enters International Markets, Nepal To Be First country!

Ola Electric enters International Markets, Nepal To Be First country! | சர்வதேச சந்தையில் நுழையும் ஓலா எலக்ட்ரிக் வாகனம்.. முதல் நாடு இதுதான்!

Story first published: Friday, September 23, 2022, 16:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.