அடிக்கடி கொரியர் அனுப்புபவரா நீங்க.. இனி இதிலும் கட்டணம் அதிகமாக போகுது.. எவ்வளவு?

பிரபல கொரியர் நிறுவனமான டிஹெச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஜனவரி 1,2023ல் இருந்து அதன் பார்சல் கட்டணத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் பார்சல் டெலிவரி கட்டணத்தினை சராசரியாக 7.9% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், நிர்வாக செலவுகளும் அதிகரித்து வருகின்றன.

8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..!

நிலையற்ற சூழல்

நிலையற்ற சூழல்

உலகளாவிய அளவில் நிலவி வரும் நிலையற்ற சூழலில், இதுவரையில் சந்தையில் பெரும் கொந்தளிப்பான நிலையே உள்ளது. மேலும் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றது.

நாங்கள் தொடர்ந்து எங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். தொழில்நுட்ப வசதியினையும் மேம்படுத்தி வருகின்றோம். இதில் அதிநவீன விமானங்கள் உள்பட வாகனங்களையும் விரிவுபடுத்தி வருவதாகவும் டி ஹெச் எல் தெரிவித்துள்ளது.

 

முதலீடுகளை  அதிகரிக்கும்

முதலீடுகளை அதிகரிக்கும்

மேலும் நிறுவனம் 2050-க்குள் பூஜ்ஜிய உமிழ்வினை எட்ட மின்சார வாகனங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

டிஹெச்எல்-ன் இந்த விலை அதிகரிப்பானது உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடும். நாட்டிற்கு நாடு மாறுபடும். மேலும் இது வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தத்தினையும் மேம்படுத்தும். கூடுதல் கட்டணங்களிலும் சரிசெய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

என்னென்ன சேவை?
 

என்னென்ன சேவை?

டிஹெச்எல்-ன் என்பது Deutsche post DHL குழுமத்தின் ஒரு பகுதியாகும். தேசிய மற்றும் சர்வதேச பார்சல், இ- நிறுவனங்களின் டெலிவரி, சர்வதேச எக்ஸ்பிரஸ், சாலை, விமானம் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட லாகிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்கி வருகின்றது.

செலவுகள் அதிகரிக்கலாம்

செலவுகள் அதிகரிக்கலாம்

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஏற்கனவே பலவற்றின் விலைவாசியானது உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையின் மத்தியில் போக்குவரத்து செலவினங்கள் கூடியுள்ளன. ஏற்கனவே செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், கொரியர் கட்டணங்களும் அதிகரித்துள்ளது செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கலாம். 

பதம் பார்க்கலாம்

பதம் பார்க்கலாம்

குறிப்பாக விழாக்கால பருவத்தில் இதன் கட்டணங்கள் அதிகரிப்பது, நிறுவனத்தின் மார்ஜினை மேம்படுத்த உதவும். எனினும் இது வாடிக்கையாளர்களின் பாக்கெட்டினை பதம் பார்க்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

DHL express plans to hike parcel delivery charges from 2023

DHL express plans to hike parcel delivery charges from 2023/அடிக்கடி கொரியர் அனுப்புபவரா நீங்க.. இனி இதிலும் கட்டணம் அதிகமாக போகுது.. எவ்வளவு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.