ஓரே மாநிலத்தில் 4 தொழிற்சாலை.. அசத்தும் பெப்சி..!

உத்தரப்பிரதேச அரசு, அதன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான இன்வெஸ்ட் UP மூலம், கோரக்பூர், அமேதி, பிரயாக்ராஜ் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் குளிர்பான தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க நாட்டின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி கோ-வின் அகில இந்திய உரிமையாளரான வருண் பீவரேஜஸ் லிமிடெட், உத்தரப்பிரதேச மாவட்டங்களில் கார்பனேட்டட் குளிர்பானங்கள், பழக் கூழ் அல்லது பழச்சாறு சார்ந்த பானங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை அமைப்பதற்காகப் பாஸ்ட் டிராக் முறையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 4 தொழிற்சாலைகள் மூலம் மொத்தம் 5,650 வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். இதே போல் இந்தத் தொழிற்சாலைகளுக்காக வருண் பீவரேஜஸ் மற்றும் பெப்சி கோ இணைந்து மொத்தம் 3,740 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இந்திய பொருளாதாரம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா..!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலும், தொழில் வளர்ச்சி அமைச்சர் நந்த கோபால் குப்தா -வின் வழிகாட்டுதல் கீழ் அரசின் விரைவான நில ஒதுக்கீடு மற்றும் மெகா திட்டங்களுக்கான ஊக்குவிப்பு ஆகியவை மாநிலத்தில் முதலீட்டை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என இன்வெஸ்ட் உபி அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி அபிஷேக் பிரகாஷ் கூறினார்.

வருண் பீவரேஜஸ்

வருண் பீவரேஜஸ்

வருண் பீவரேஜஸ் லிமிடெட் நிறுவனத்திற்குக் கோரக்பூரின் நர்கதா கிராமத்தில் 45 ஏக்கர் நிலம் விரைவுப் பாதையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி பிரதமேஷ் குமார் தெரிவித்தார். இங்கு 1071.28 கோடி ரூபாய் முதலீடு செய்து, சுமார் 1,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

பர்கர் தொழில்துறை பகுதி
 

பர்கர் தொழில்துறை பகுதி

சித்ரகூடில் உள்ள பர்கர் தொழில்துறை பகுதியில் 68.6 ஏக்கர் நிலத்தை ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு வருண் பீவரேஜஸ் லிமிடெட் சுமார் ரூ.496.57 கோடியை முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது, இதன் மூலம் 1,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சரஸ்வதி ஹைடெக் சிட்டி

சரஸ்வதி ஹைடெக் சிட்டி

இதேபோல் சரஸ்வதி ஹைடெக் சிட்டி, நைனி-பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் சுமார் 24.7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் முதலீட்டாளர் 1,500 வேலை வாய்ப்புகளுடன் ரூ 1,052.57 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

திரிசுண்டி தொழில்துறை பகுதி

திரிசுண்டி தொழில்துறை பகுதி

இதேபோல் திரிசுண்டி தொழில்துறை பகுதி-அமேதியில் 26.1 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 1,650 வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வாய்ப்புகள் உசன் ரூ.1,119.59 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது வருண் பீவரேஜஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PepsiCo going to set up 4 factories for carbonated soft drinks, juice-based drinks in Uttar Pradesh

PepsiCo going to set up 4 factories for carbonated soft drinks, juice-based drinks in Uttar Pradesh

Story first published: Friday, September 23, 2022, 19:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.