WFH-க்கு கோடான கோடி நன்றி.. எஸ்பிஐ வங்கி-யின் சூப்பர் ரிப்போர்ட்..!

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் பல துறைகளில் பல மாற்றங்கள் உருவான நிலையில் வங்கி துறையிலும் ஏற்பட்டது.

இந்த லாக்டவுன் காரணத்தால் வர்த்தகச் சந்தை மொத்தமும் பெரு நகரங்களில் இருந்து கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு மாறியது யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நகரங்களை விடவும் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் தான் அதிக வாகனங்களை முதல் மற்றும் 2ஆம் கொரோனா அலையில் விற்பனை செய்தது.

இதேபோன்ற ஒரு சம்பவம் ரியல் எஸ்டேட் துறையில் நடந்துள்ளது தான் எஸ்பிஐ தற்போது அறிவித்துள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. 82 ஆக வீழ்ச்சி காணலாம்..!

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்று ஆரம்பம் முதலே இந்திய பெரு நகரங்களில் இருந்த பெரும்பாலான மக்கள் சொத்து ஊருக்கு சென்றனர், இதனாலேயே 2 ஆம்,3 ஆம், 4 ஆம் தர நகரங்களில் ரீடைல் வர்த்தகம் சூடுபிடித்தது மட்டும் அல்லாமல் பணப் பரிமாற்றமும் அதிகரிக்கத் துவங்கியது.

கிராமம் மற்றும் டவுன் பகுதி

கிராமம் மற்றும் டவுன் பகுதி

இதேபோல் பெரும்பாலான மக்கள் சொந்த ஊரில் அதாவது கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருந்து வொர்க் ப்ரம் ஹோம் செய்த காரணத்தால் ஊரகப் பகுதிகளில் புதிய வீடுகளைக் கட்டுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

புதிய வீடு
 

புதிய வீடு

இதேபோல் நகரங்களில் இருந்து திடீரெனச் சொந்த ஊருக்கு வந்த காரணத்தால் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தாலும், பல நிரந்தரமாகச் சொந்த ஊரிலேயே இருக்க விருப்பப்பட்டுப் புதிய வீடு கட்டுவதோ அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்கம் செய்யவோ முடிவு செய்தனர்.

3 ஆம், 4 ஆம் தர நகரங்கள்

3 ஆம், 4 ஆம் தர நகரங்கள்

இதனால் 3 ஆம், 4 ஆம் தர நகரங்களில் வீட்டுக் கடன் வர்த்தகம் முதல் மற்றும் 2ஆம் தர நகரங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் சராசரி கடன் அளவுகளும் நகரங்களைக் காட்டிலும் டவுன் மற்றும் கிராமங்களில் அதிகரித்துள்ளது.

ஹோம் லோன்

ஹோம் லோன்

இதன் மூலம் ஹோம் லோன் வர்த்தகம் 2019 ஆம் நிதியாண்டில் இருந்து 2022 ஆம் நிதியாண்டு வரையில் சராசரியாக 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் 3ஆம் தர மற்றும் 4ஆம் தர நகரங்களில் 12- 13 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

விசாகப்பட்டினம், கவுகாத்தி, ராய்ப்பூர், சூரத், வதோதரா, ஜெய்ப்பூர், லக்னோ, டேராடூன், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ஹோம் லோன் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Work from Home made Big changes in Home loan Segment; Tier 3 and 4 districts clocks 13% CAGR

Work from Home made Big changes in Home loan Segment; Tier 3 and 4 districts clocks 13% CAGR

Story first published: Friday, September 23, 2022, 18:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.