'சீதா ராமம்' மிஸ் ஆன காட்சி..இந்த சீனும் நல்லாத்தானே இருக்கு..கத்திரி போட காரணம் என்ன?

சென்னை : ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற சீதா ராமம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதா ராமம்.

ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து ரசிகர்களும் பாராட்டை பெற்று வருகிறது.

சீதா ராமம் கதை

தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் அதாவத கதையின் நாயகி மிருனாளின் தாக்கூர் கொடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஆஃப்ரீன் ராஷ்மிகா மந்தனாவுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் சீதா மகாலட்சுமியைத் தேடி இந்தியா வருகிறார் ராஷ்மிகா.

இறுதியில் என்ன ஆனது

இறுதியில் என்ன ஆனது

நாயகியை தேடி பல இடங்களில் அலைகிறார் இதில் சீதா – ராம் காதல் கதை அறிமுகமாகிறது. யார் இந்த சீதா – ராம்? அவர்களின் காதல் கதை என்ன? அந்தக் கடித்தத்தில் என்ன இருக்கிறது? இறுதியில் அந்தக் கடிதம் சீதாவிடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை மிகவும் அழகாக நயமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

பாராட்டுக்குரிய நடிப்பு

பாராட்டுக்குரிய நடிப்பு

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் கதாபாத்திரங்களாக நடித்தார்கள் என்பதைவிட அந்த கதாபாத்திரமாக மாறியது தான் இந்த படத்தின் வெற்றி என்று கூறப்படுகிறது. வழக்கமாக துல்கர்சர்மான ரொமான்ஸ்சில் குறையே வைக்காமல் அமர்க்களப்படுத்துவார் அதை அவர் திறம்பட செய்துள்ளார். அவரது நடிப்பை பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்

நீக்கப்பட்ட காட்சி

நீக்கப்பட்ட காட்சி

இப்படம் வெளியாகி 50 நாள் ஆகியுள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தக்காட்சியில் துல்கர் சல்மானும் அவருடன் சிறைப்பட்டு இருக்கும் உயர் அதிகாரி கால் பந்து விளையாடும் காட்சிகளும், சண்டைப்போட்டு கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கத்திரிபோட காரணம்

கத்திரிபோட காரணம்

இந்த சீனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியும் நல்லத்தானே இருக்கு, இதுவும் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்று கருத்துக்கூறி வருகின்றனர். ஆனால்,படக்குழுவோ படத்தின் நீளம் கருதியே கத்திரிபோட்டு இந்த காட்சியை அப்படியே தூக்கி உள்ளது. சீதா ராமம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.