புதுடில்லி: இந்திய ஹாக்கி சங்க தலைவராக முன்னாள் கேப்டன் திலிப் டர்க்கி தேர்வு பெற்றார்.
இந்திய ஹாக்கி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் அக்.1ல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் திலிப் டர்க்கி, (44 )போட்டியிட்டார்.
இந்நிலையில் தலைவர் தேர்தலில் டர்க்கியை எதிர்த்து மாநில ஹாக்கி சங்க தலைவர்களான ராகேஷ் கட்யால்(உ.பி.,), போலா நாத் சிங் (ஜார்க்கண்ட்) போட்டியிடுகின்றனர்.
புதிய திருப்பமாக தேர்தலில் இருந்து ராகேஷ் கட்யால் விலகினார். தலைவர் தேர்தலில் திலிப் டர்க்கி வெற்றி பெறுவது உறுதியானது. இதையடுத்து தலைவராக திலிப் டர்க்கி தேர்வு பெற்றார். பொதுச்செயலராக போலா நாத் சிங் தேர்வு பெற்றார். ஒடிசாவை சேர்ந்த திலிப் டர்க்கி ,இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில்(412) பங்கேற்றவர். 2010ல் ஓய்வு பெற்றார்.
மேலும் இந்திய ஹாக்கி சங்க துணை தலைவர், இணைச் செயலர், பொருளாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. பொருளாளர் பதவிக்கு தமிழக ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement