அமெரிக்க நிறுவன பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?

இந்திய வர்த்தகத் துறையில் அம்பானியும், அதானியும் போட்டிப்போட்டு தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், முகேஷ் அம்பானி தற்போது அமெரிக்க நிறுவன பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்வதில் படு பசியாக இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் வெளிநாட்டு பிராண்டுகளின் இந்திய வர்த்தகத்தை வாங்க திட்டம் அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தும் இன்னும் வர்த்தகம் துவங்காமல் இருக்கும் காரணத்தால் இப்பரிவு பணிகளை விரைவாக முடிக்கத் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

 ரிலையன்ஸ் நியூ எனர்ஜி

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சோலார் தொழில்நுட்ப நிறுவனமான Caelux Corporation-னின் 20 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சோலார் தொழில்நுட்பம்

சோலார் தொழில்நுட்பம்

Caelux Corporation நிறுனவம் perovskite என்னும் சோலார் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது, இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் சுமார் 12 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

 கிரீன் எனர்ஜி உற்பத்தி
 

கிரீன் எனர்ஜி உற்பத்தி

இந்த முதலீட்டின் மூலம் மேம்பட்ட கிரீன் எனர்ஜி உற்பத்தி தளத்தை உலகளாவிய தொழில்நுட்பத்தில் உருவாக்க முடியும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குஜராத் ஜாம்நகர்

குஜராத் ஜாம்நகர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தற்போது குஜராத் ஜாம்நகரில் மிகப்பெரிய போட்டோவோல்டாயிக் ஜிகா பேக்டரியை கட்டி வரும் நிலையில் Caelux Corporation நிறுனவம் perovskite என்னும் சோலார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சக்திவாய்ந்த அதேநேரத்தில் மலிவான விலையில் சோலார் மாடியூல் தயாரிக்க முடியும்.

சோலார் மாடியூல்

சோலார் மாடியூல்

Caelux Corporation நிறுவனத்தின் தொழில்நுட்பம் மூலம் தற்போது சந்தையில் கிடைக்கும் சோலார் மாடியூல்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் மாடியூல்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல் சோலார் திட்டத்தின் ஆயுட்காலம் 25 வருடத்தைத் தாண்டும். அனைத்திற்கும் மேலாக இவை அனைத்தையும் குறைந்த செலவில் செய்ய முடியும் என்பது தான் முக்கியமானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance New Energy buying 20 percent shares of US-based Caelux crop for its solar technology

Reliance New Energy buying 20 percent shares of US-based Caelux crop for its solar technology

Story first published: Friday, September 23, 2022, 15:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.