புதுடெல்லி: உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை மது பாட்டில்களிலும் அச்சிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளில், ‘புகைப் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’, ‘அது புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு இருக்கும். இந்நிலையில், சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று, மது பாட்டில்களிலும் ‘உடல் நலத்திற்கு கேடு’ என்ற வாசகம் இடம் பெற உத்தரவு பிறப்பிக்கும்படி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.
இது நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை’ என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.