வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர்

ரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது.

மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. ஊரே அனுமனை கொண்டாடி மகிழ்ந்தது.

அந்த அனுமனின் ஆற்றல் மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது. பொதுவாக திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரரை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவர். அதே போல் சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு.

முக்கியமாக அமாவாசை நாளில் இங்கே கிரிவலம் வந்து அனுமனை வணங்கிச் சென்றால் மன தைரியம் கூடும்; சனி தோஷங்கள் விலகும்; திருமணம், குழந்தைப்பேறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நோயற்ற வாழ்வு போன்ற நற்பலன்கள் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள். சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு.

மன தைரியம் கிடைக்கவும், சனி தோஷங்கள் விலக, திருமணம், குழந்தைப்பேறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நோயற்ற வாழ்வு வாழ இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.