அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள தாம்ராத் காவல் நிலையத்திற்கு 11 வயது சிறுமிஸயின் தாய் புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “தூரத்து உறவினரான தம்பி முறை கொண்ட 31 வயது வாலிபர் ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர், வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் அழுகையை நிறுத்த அந்த வாலிபர் 100 ரூபாய் பணமும், சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும், நெருங்கிய உறவினர்கள் சிலரும் அந்த வாலிபரிடம் தட்டி கேட்ட போது, கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியதாகவும்” போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துப்ரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
சகோதரியின் 11 வயது மகளை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதை இதுபோன்ற கொடூர சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.