தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன் – நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். அடிக்கடி வெளிநாடு பறப்பது, கோவில் செல்வது என இந்த தம்பதியினர் திருமணத்திற்கு பின்னும் சந்தோஷமாக தனது நாட்களை கழித்து வந்தனர். நயன்தாரா தாலி அணிந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டான நிலையில் தற்போது சில சின்னத்திரை நடிகைகளும் நகைகள் எதுவுமின்றி தாலி மட்டும் வெளியே தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து பல கணவன்-மனைவிகள் பொறாமைப்படும் அளவிற்கு இந்த ஜோடி ஒருவருக்கொருவர் விலையுயர்ந்த பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நயன்தாரா அவரை துபாய்க்கு அழைத்து சென்று அங்கு குடும்பத்தினருடன் சந்தோஷமாக பிறந்தநாள் விழாவை கொண்டாட செய்தார். தனது மனைவி தனக்கு கொடுத்த சர்ப்ரைஸை எண்ணி மகிழ்ந்து விக்னேஷ் சிவன் அவரை புகழ்ந்து சமூக வலைதள பக்கத்தில் ரைட்டப் போட்டிருந்தார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மற்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
அப்படி என்ன புகைப்படம் என்றால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் நிற்கின்றனர், அதில் ஹைலைட் என்னவென்றால் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்று எழுதியுள்ளார். இப்படி ஒரு வசனத்தை பார்த்ததும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் போல, அதனை வெளிப்படையாக சொல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். சில ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என்றும் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.