படம் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.. உபர் நிறுவனத்திற்கு இரட்டிப்பு வருமானம்

இந்தியாவின் முன்னணி கேப் சேவை நிறுவனங்களில் ஒன்றான உபர் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர் தங்கள் காரில் பயணம் செய்யும்போது பொழுதுபோக்கிற்காக டேப்லெட் வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த டேப்லட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி விளம்பரங்களும் இருக்கும் என்பதால் உபர் நிறுவனத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உபர் நிறுவனம்

உபர் காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விளம்பரங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை காட்டுவதற்காக காரில் டேப்லட்களை வைக்க முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் டில்லியில் முதல்கட்டமாக உபர் காரில் டேப்லட்கள் வைக்கப்பட உள்ளதாகவும், அடுத்தடுத்து மற்ற பெரிய நகரங்களிலும் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கூடுதல் வருமானம்

கூடுதல் வருமானம்

இதன் மூலம் பயணிகள் தங்கள் காரில் பயணம் செய்யும்போது பொழுதுபோக்கு அம்சங்களை பார்ப்பது மட்டுமின்றி விளம்பரங்களையும் பார்ப்பார்கள். இதனால் உபர் நிறுவனத்திற்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் இந்த டேப்லட்டில் உபேர் நிறுவனங்களின் விளம்பரங்கள் அதாவது உபேர் ஈட்ஸ் போன்ற விளம்பரங்கள் பயணிகளுக்கு காண்பிக்கப்படும் என்றும் மூன்றாம் நிறுவனத்தின் விளம்பரங்களும் காண்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

உணவகம் - தங்குமிடம்
 

உணவகம் – தங்குமிடம்

அதுமட்டுமின்றி நீங்கள் விமான நிலையத்தில் இருந்து உணவகம் செல்லவோ அல்லது தங்குமிடம் செல்லவோ இந்த டேப்லட் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகளும் உண்டு என்பது குறிப்பிடதக்கது. இந்த திட்டம் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது பகிர முடியாது என்று கூறியுள்ள உபர் செய்தி தொடர்பாளர், இந்த திட்டம் ஒரு உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்

போட்டி நிறுவனம்

போட்டி நிறுவனம்

ஏற்கனவே உபேர் நிறுவனத்தின் போட்டியாளரான Lyft கடந்த மாதம் கார்களில் விளம்பரம் காண்பிக்கும் டேப்லட் வைத்ததை அடுத்து தற்போது உபர் நிறுவனமும் பயணிகளுக்கு அதேபோன்ற வசதியை செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 ஓலா பிளே

ஓலா பிளே

2016ஆம் ஆண்டில் ஓலா நிறுவனம் ஓலா பிளே என்ற பெயரில் இதே போன்ற சேவையை அறிமுகப்படுத்தியது என்பதும் அதில் இசை மற்றும் பிற சேவைகள் இருந்ததோடு விளம்பரமும் பயணிகளுக்கு காண்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த சேவை மூடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Uber is testing To Show Ads Soon in car in tablets in Delhi and Mumbai!

Uber is testing To Show Ads Soon incar tablets in Delhi and Mumbai | படம் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.. உபர் நிறுவனத்திற்கு இரட்டிப்பு வருமானம்

Story first published: Saturday, September 24, 2022, 8:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.