அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் சட்ட சபை அமர்வு கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும்.. கவர்னரும் கேட்டதில்லை.. என்று ஆம் ஆத்மி கட்சி அம்மாநில கவர்னரை விமர்சித்துள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில் குஜராத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தற்போதே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் சென்று மக்களை சந்தித்து, ‘எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம்’ என ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
மெஜாரிட்டியை நிரூபிக்க
இதற்கிடையே பாஜக குஜராத் தேர்தலில் தோல்வியை தழுவி விடும் என்ற பயத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக செயல்படுத்த முயன்று வருவதாகவும், இதன் மூலம் ஆம் ஆத்மி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி பஞ்சாபில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்த முயல்வதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதனால் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்க முடிவு செய்தனர். இதற்கு முதலில் அம்மாநில ஆளுநர் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 22-ஆம் தேதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மைய நீருபிக்க தயாராக இருந்தது.
ஜனநாயக படுகொலை
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அதற்கு முந்தைய நாள் இரவில் சட்டசபையை கூட்ட அனுமதி மறுத்து அறிவிப்பு வெளியிட்டார். இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட சபை கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்தது ஜனநாயக படுகொலை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இது குறித்து அந்த மாநில முதல்வர்பகவத் மான் கூறுகையில், ”சட்டப்பேரவையை நடத்த அளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதிக்காதது நாட்டின் ஜனநாயகத்தின் மீது கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது. ஜனநாயகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறதா? இல்லை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவரால் மட்டும் நடத்தப்படுகிறதா?” என்று விம்ர்சித்தார்.
சட்டசபைக் கூட்டம்
மேலும் பல ஆம் ஆத்மி கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகவும் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இப்படி பஞ்சாப் அரசியல் பரபரத்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவயை மீண்டும் கூட்டுவதற்கு ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 27 ஆம் தேதி சட்டசபைக் கூட்டம் நடைபெறுவதற்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட சபை அமர்வில், விவசாய கழிவுகள் எரிக்கப்படும் விவகாரம் மற்றும் மின்சார பிரச்சினை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் கேபினட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும்
இந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் அஜெண்டா என்ன? என்று ஆளுநர் கோரியிருப்பதற்கு ஆம் ஆத்மி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சட்ட சபை அமர்வு கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும் கவர்னரும் கேட்டதில்லை. இனி உறுப்பினர்களின் அனைத்து பேச்சுக்களுக்கும் தன்னுடைய ஒப்புதல் வேண்டும் என்று கவர்னார் கூறுவார்.. its too much..” என்று பதிவிட்டுள்ளார்.
அப்போது பார்த்துக்கொள்ளலாம்
இதனிடையே, பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பல் சிங்கிடம் சிறப்பு சட்ட சபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”அவையில் எந்த விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அவை தொடங்குவதற்கு முன்பாக இந்தக் கூட்டம் நடைபெறும். அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என மழுப்பி விட்டு சென்றார்