இருந்தும் வருந்துகிறார் சோகப்பாட்டு பாடி…!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ. 25 கோடியை வென்ற ஆட்டோ டிரைவர், பணம் இன்னும் கைக்கு கிடைக்காத நிலையில், பலரும் உதவி கேட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் பணம் வராததை புரிந்து கொள்ள முடியாதவர்களால் பரிசு கிடைக்காமல் போயிருக்கலாம் என புலம்பி வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அனூப். குலுக்கலுக்கு முதல்நாள் மாலையே அந்த லாட்டரியை அனூப் வாங்கியிருந்த நிலையில் அதிர்ஷடம் அவரைத் தேடிவந்தது.

latest tamil news

தனது மகன் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்கு முதல் நாள் மாலை லாட்டரி வாங்கிய நிலையில், அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் காரணமாக ரூ.25 கோடி பரிசு கிடைத்தது. இதனால், கூட்டுறவு வங்கியில் கேட்டிருந்த கடனை வேண்டாம் என கூறிவிட்டு, வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்தார்.

ரூ. 25 கோடி பரிசு கிடைத்திருக்கும் அனூப்புக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிதம் வரி போக ரூ.15.75 கோடி கிடைக்கும். இவ்வளவு பணம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் இதுவரை இருந்த அனூப்பிற்கு தற்போது அது போயுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: “லாட்டரி பரிசு கிடைத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. ஆனால், இப்போது எனது மகிழ்ச்சி அனைத்தும் போய்விட்டது. காரணம் வெளியே எந்த இடத்துக்கும் என்னால் போக முடியவில்லை. உதவிகேட்டு நிறையபேர் வருகிறார்கள். என் கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். கொஞ்சமாவது பணம் கொடு என்கிறார்கள். அதனால் தான் எனது வீட்டில் என்னால் இருக்க முடியாமல் தலைமறைவாக உள்ளேன்.

latest tamil news

நான் எங்குச் சென்றாலும், என்னத் தேடி வருகிறார்கள். இதனால் குழந்தையை பார்க்க முடியாமல், தலைமறைவாக உள்ளேன். எனக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளது. ஆனால், பணம் இன்னும் வந்துசேரவில்லை என்ற நிலையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கிடைக்காமல் போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.