பாகிஸ்தான்-ஐ எச்சரிக்கும் ரஷ்யா.. எதற்காக..?

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது, இதனால் ரஷ்யா தனது படைகளைப் புதிய திட்டங்கள் உடன் களமிறக்கி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்கு உலகில் பல நாடுகளில் இருந்து உதவிகளும், ஆதரவு கிடைத்து வருவதால் உக்ரைன் படை வலிமை அடைந்து வருகிறது. இது ரஷ்யாவுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி வரும் நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்து வரும் பாகிஸ்தான் உக்ரைன் நாட்டிற்கு உதவியுள்ளதாகத் தகவல் வெளியானது.

விளாடிமீர் புதின் பாகிஸ்தான் உதவிய செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

ரஷ்யா கொடுத்த நம்பிக்கை,சவுதி-யும் வந்தது.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைன் நாட்டிற்குப் பாகிஸ்தான் உதவியதாக வெளியான செய்து உறுதி செய்யப்பட்டால், கடுமையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ரஷ்யா – பாகிஸ்தான் உறவில் ஏற்படும் என ரஷ்ய அம்பாசிட்டர் டென்னிஸ் அலிப்போவ் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பிரச்சனைகளைச் சரி செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் Denis Alipov-வும் ஒருவர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பொருளாதாரப் பாதிப்பாலும், நிதி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் தற்போது பல வழிகளில் நிதியுதவிகளைப் பெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களைப் பாகிஸ்தான் சப்ளை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் பணிகளில் தற்போது ரஷ்யா இறங்கியுள்ளது, இதுமட்டும் உண்மையானால் பெரும் தாக்கம் ஏற்படும்.

SCO மாநாடு
 

SCO மாநாடு

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த SCO மாநாட்டில் நேரில் சந்தித்துப் பேசினர். இதற்கடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் அனுப்பிய ஆயுதங்கள் உக்ரைன் போர்களத்தில் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியானது.

பிரிட்டிஷ் விமானத் தளம்

பிரிட்டிஷ் விமானத் தளம்

ஆகஸ்ட் மாதத்தில் Mediterranean கடல் உள்ள பிரிட்டிஷ் விமானத் தளம் ருமேனியாவில் உள்ள அவ்ராம் இயன்குக்ளூஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு இராணுவ விமானப் பயணங்களுக்கு ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளத்தைத் தான் இங்கிலாந்து பயன்படுத்திய குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan supply arms to Ukraine; Russia warns PAK if reports were true

Pakistan supply arms to Ukraine; Russia warns PAK if reports were true

Story first published: Saturday, September 24, 2022, 12:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.