ஆஹா.. பாக்கெட் சைஸில் ஒரு 'ராட்சஷன்'.. டைனோசர் மூதாதையரின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு! வாவ்

ஆன்டனாநரிவோ: மடகாஸ்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் டைனோசர்களின் மூதாதையரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அந்த டைனோசர்கள் வெறும் ‘பாக்கெட்’ சைஸில் இருந்திருக்கின்றன என்பதுதான். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகக் குரூமமான உயிரினமாக அவை இந்த உலகில் நடமாடி வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டைனோசர்கள் குறித்த தகவல்கள் எப்போதுமே சுவாரசியமானது தான். மனிதர்கள் உள்ளிட்ட இப்போதிருக்கும் பல உயிரினங்கள் தோன்றாத காலத்தில், பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய பிரம்மாண்ட விலங்கினம் டைனோசர்.

‘ஜூராசிக் பார்க்’

பிரிட்டனில் 1677-இல் முதன்முதலாக டைனோசரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், 1990-களில் வெளிவந்த ஜூராசிக் பார்க் திரைப்படமே டைனோசர்களை பெரும்பாலான மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தன. டைனோசர்கள் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? என்பன போன்ற சுவாரசியமான தகவல்களை சாமானிய மக்களும் தெரிந்துகொண்டது ஜுராசிக் பார்க் திரைப்படம் மூலமாகதான்.

இன்னும் டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சி உலக அளவில் நடைபெறுவது மட்டுமல்லாமல், அது சம்பந்தமான தகவல்கள் நம்மை இன்றளவும் ஆச்சரியப்படுத்தி வருகின்றன என்பதுதான் அதன் தனிச்சிறப்பாக இருக்கிறது.

அந்த வகையில், டைனோசர்களை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:

 டைனோசர் மூதாதையர் கொங்கோஃபோன்

டைனோசர் மூதாதையர் கொங்கோஃபோன்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்கள், டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நாட்டில்தான் அதிக அளவில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.

இந்நிலையில், மடகாஸ்கரின் ஆன்டனாநரிவோ நகரில் அண்மையில் நடைபெற்ற ஒரு அகழ்வாய்வில் சில எலும்புக் கூடுகளும், எலும்புப் படிவங்களும் கிடைத்திருக்கின்றன. இதை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் சமைந்துவிட்டனர். ஏனெனில், அது டைனோசர்களின் மூதாதையரான ‘கொங்கோஃபோன்’ என்ற உயிரினத்தின் எலும்புக் கூடு.

 ஸமார்ட்ஃபோன் சைஸ் தான். ஆனால்..

ஸமார்ட்ஃபோன் சைஸ் தான். ஆனால்..

இதில் மேலும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், பார்ப்பதற்கு அச்சு அசலாக டைனோசர்களை போல இருந்தாலும், இதன் அளவு மிகவும் சிறியது. அதாவது 7 முதல் 8 இன்ச் தான் அதன் உயரம். இன்னும் சரியாக சொல்வதென்றால், நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனை விட சற்று பெரிதாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால் சிறியதாக இருக்கிறது என்று இதை சாதாரணமாக எடைபோட்டு விடக் கூடாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவை தீவிரமான மாமிச உன்னி என்பதுடன், மிகக் கொடூரமாகவும், துணிச்சலாகவும் வேட்டையாடக் கூடிய விலங்குகளாக இருந்திருக்கின்றன.

 'பாக்கெட் சைஸ் ராட்சஷன்'

‘பாக்கெட் சைஸ் ராட்சஷன்’

டைனோசர்களை போலவே பின்னங்காலில் நடந்துள்ள இந்த உயிரினங்கள், கூட்டம் கூட்டமாக சென்று சிறிய அளவிலான உயிரினங்களை வேட்டையாடி இருக்கின்றன. மேலும், பெரிய அளவிலான பூச்சிகளையும் இந்த உயிரினங்கள் உண்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுருக்கமான இதனை ‘பாக்கெட் சைஸில் ராட்சஷன்’ எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

டைனோசர் தோன்றுவதற்கு 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கொங்கோஃபோன் விலங்குகள் வாழ்திருக்கின்றன என்றும், பின்னர் இந்த உயிரினங்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பிரம்மாண்டமான டைனோசர்களாக உருவாகியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல அடி உயரத்தில் பிரம்மாண்டமாக நாம் அறிந்த டைனோசர்கள், வெறும் பாக்கெட் சைஸில் உலகில் நடமாடியதை நினைத்து பார்க்கும் போது வியப்பாகதான் இருக்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.