காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் அகழ்வாய்வில் போது தங்கம் கிடைத்திருப்பது தொல்லியல் துறையினரிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூலை 3-ம் தேதி தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு பணியை தொடங்கினர். தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் வரலாற்று காலத் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் ஒன்றரை கிராம் அளவில் தங்கத்தால் ஆனா அணிகலன்கள் 2 கிடைத்துள்ளன.
அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 3 செங்கல் சுவர்கள், பல்வேறு வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் சூடு மண்ணால் செய்யப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.