"எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகள் குறித்த பயத்தில் இருக்கிறார்கள்"  – கபில் சிபில் 

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவைகள் குறித்த அச்சத்துடனேயே இருக்கின்றனர் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பேசிய கபில் சிபல் கூறியதாவது: மதத்தை ஒரு ஆயதமாக பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. மதங்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இந்தியா ஒரு மிகையான உதாரணமாகும்.

தற்போது உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்த அமைப்புடன் ஒன்றிணைந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் காவல்துறை எதையும் செய்யத் தயாராக இல்லை.

வெறுக்கத்தக்க வகையில் பேசுபவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதால் இது ஓர் இயல்பான பேச்சு என்கிற தைரியத்திற்கு வழிவகை செய்கிறது.

மக்கள் அனைவரும் பயத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் பயம் கொள்ள மட்டுமே முடிகிறது. நாம் தொடர்ந்து பயத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அமலாக்கத்துறையால் நமக்கு பயம், சிபிஐ-ஆல் நமக்கு பயம், மாநில அரசு, காவல்துறையாலும் நமக்கு பயம். எல்லாவற்றையும் பார்த்து நமக்கு பயம். அதனால் யாரும் யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் நம்பத் தயாராக இல்லை. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

தொடர்ந்து நீதித்துறையையும் விமர்சித்த அவர், சாமனியனால் வழக்கறிஞர்களுக்கு பணம் தரமுடியாதால் அவர்களால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.