Chennai Tamil News: சென்னை விமான நிலையத்தில் இருந்து தெற்கு திசையில் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் பல மாதங்களாக இருந்துகொண்டே இருக்கிறது.
இதற்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வண்டலூரை அடுத்து உள்ள கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் பத்து மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கேற்ற பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மீனம்பாக்கம் முதல் கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதமே சமர்பித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மெட்ரோ ரயில் முதற்கட்ட விரிவாக்கப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை, உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதை வைத்தே மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான அறிக்கையில் 2026ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ ரயில் திட்டம் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil