மாணவர்களுக்காக தனி ஆளாக பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர்: வைரலாகும் வீடியோ

தனி ஆளாக தனியார் பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர் ஒருவரது வீடியோ வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் செய்தியாக பேசப்பட்டு, பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாஸ், அரசு பேருந்தில் அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாத கால கட்டணம் செலுத்தி வாங்கப்படுகிறது. தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடை இருந்தாலே போதும். சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தில் இருந்து பாதிக்கு மேலாக குறைக்கப்பட்டு பயண கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த பழக்கங்கள் கேரளாவில் இதுவரையிலும் வழக்கமாக இருந்து வருகின்றன. 

இதனால் பெரும்பாலான தனியார் பேருந்துகள் மாணவர்களை அதிகமாக ஏற்றினால் தங்கள் கலெக்ஷன் குறைந்து விடும் எனக் கூறி, மாணவர்களை பேருந்தில் ஏற்றாமல் செல்வதும் வழக்கமாக நடந்து வரும் நிகழ்ச்சியே. 

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாழக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று பாலக்காடு – கோழிக்கோடு நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியாக செல்லும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் பள்ளி முன்பு மாணவர்கள் நின்றாலும், நிற்காமல் போவதை வழக்கமாக கொண்டுள்ளன.

பள்ளி நேரம் முடிந்து சாலையில் ஏராளமான மாணவர்கள் குவியும் போது, இவர்களை ஏற்றினால் முழு பேருந்தும் நிறைந்து விடும், தங்களது கலெக்ஷன் கெட்டு விடும் என எண்ணி தனியார் பேருந்துகள் அந்தப் பகுதியில் நிறுத்துவதே இல்லை.

இதைத் தொடர்ந்து மாணவர்களும், பள்ளி ஆசிரியர்களும் அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை. தொடர்ந்து இந்த செய்தி பள்ளி தலைமை ஆசிரியர் காதுக்கு சென்றுள்ளது.

பள்ளி நேரம் முடியும் முன்பே அதற்கு முன்பே உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் பேருந்தை நிறுத்தி, நடத்துனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளியின் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரை நடந்தே வந்து அங்கு பேருந்திற்காக காத்திருந்த மாணவர்களையும் அதே பேருந்தில் அனுப்பி வைத்தார்.

தனி ஆளாக நின்று மாணவர்களுக்காக போராடிய தலைமை ஆசிரியரின் இந்த வீடியோ காட்சிகள் தற்போது காட்டு தீ போல சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.