பெங்களூர் நிறுவனத்தை மூடும் டாடா.. ஊழியர்கள் நிலை என்ன..?!

டாடா குழுமத்தின் புதிய முயற்சிகள், திட்டங்களை ஊக்குவிக்கும் டாடா இண்டஸ்ட்ரீஸ் பிரிவின் கீழ் இயங்கி வரும், டாடா ஹெல்த் நிறுவனத்தின் ஹெல்த்கேர் சர்வீசஸ் பிசினஸை மூட முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை, அதிகப்படியான வட்டி விகிதம் ஆகியவற்றின் காரணமாக வர்த்தகம் மறுசீரமைப்புச் செய்யத் துவங்கியுள்ளது.

இதில் மறுசீரமைப்பில் வருவாய் அளிக்காத பல வர்த்தக நிறுவனங்கள், பிரிவுகளை மூடவோ அல்லது பிறவற்றுடன் இணைக்கவோ முடியும். இதன் மூலம் செலவுகள் பெரிய அளவில் குறைக்க முடியும்.

இதன் படி டாடா குழுமம் தற்போது டாடா ஹெல்த் மீது கைவைத்துள்ளது.

TATA Steel: 7 நிறுவனங்களை இணைக்கும் டாடா.. சந்திரசேகரன் எடுத்த முக்கிய முடிவு..!

டாடா ஹெல்த்

டாடா ஹெல்த்

டாடா ஹெல்த் என்பது டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். டாடா குழுமத்தின் டிஜிட்டல் ஹெல்த் பிரிவாக இருக்கும் டாடா ஹெல்த் அதன் வாடிக்கையாளர்களுக்கு முன் கணிப்பு, தடுப்பு மற்றும் தனிப்பட்ட ஹெல்த்கேர் சேவைகளை வழங்கி வருகிறது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட டாடா ஹெல்த் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் டிஜிட்டல் ஹெல்த் சேவைகள் அக்டோபர் 1 முதல் டாடா 1mg (டாடா டிஜிட்டலால் இயக்கப்படுகிறது) மூலம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

டாடா ஹெல்த் நிறுவனம் துவங்கப்பட்டு 7 வருடமாகியுள்ளது.

அக்டோபர் 1
 

அக்டோபர் 1

டாடா ஹெல்த் செயலியில், அக்டோபர் 1 முதல் டாடா ஹெல்த் வழங்கும் அனைத்து டிஜிட்டல் ஹெல்த் கேர் சேவைகளும் முதன்மை தளமாக டாடா 1mg மூலம் கிடைக்கும் என்று இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

இதனால் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கத் தேவையில்லை..!

 வர்த்தகம் மூடல்

வர்த்தகம் மூடல்

இதன் மூலம் டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஹெல்த் வர்த்தகப் பிரிவை விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தாலும், வர்த்தகத்தை ஈர்க்க முடியாத காரணத்தாலும் இப்பிரிவை மூட அறிவித்துள்ளது. இந்தச் செயலி மூலம் ஹெல்த் செக்அப் பேகேஜ், ஆன்லைன் டாக்டர் கன்சல்டேஷன், ஈ பார்மசி சேவை எனப் பல சேவைகள் ஓரே இடத்தில் அளித்து வந்தது.

 7 உலோக நிறுவனங்களை

7 உலோக நிறுவனங்களை

டாடா குழுமம் தனது உலோக வர்த்தகத்தில் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோகம் சார்ந்த நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இணைப்பு

இணைப்பு

இதன் படி டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகிய 7 நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Group closing its Bengaluru Tata Health Company

Tata Group closing its Bengaluru Tata Health company since its cant scale to a greater extent, merging services with TATA 1MG

Story first published: Saturday, September 24, 2022, 17:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.