வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்.,1 ல் , இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்து முடிந்தது. அதில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன், அதானியின் டேடா நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் பங்கேற்றன. சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அளித்த பேட்டி ஒன்றில், அக்.,1 ல் 5ஜி சேவையை துவக்க இந்தியா தயாராகி வருகிறது. 5ஜி பயணம் மிகச்சிறப்பானதாக இருக்கும்.
ஏராளமான நாடுகள் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கிடைக்கும் அளவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், குறுகிய காலத்தில் 80 சதவீதம் பேரை கவரும் வகையில் 5ஜி சேவைகள் துவக்கப்படும் எனக்கூறியிருந்தார். அதற்கு முன்னர், 5ஜி சேவைகள் துவக்குவதற்கு தயாராக இருக்கும்படி சேவை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்.1ல் டில்லியில் நடக்கும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை துவக்கி வைக்க உள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது. 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement