மன்மோகன் சிங் சூப்பர் தான், ஆனா பொருளாதாரம்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிரடி..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு விகிக்கும் ஐடி துறையின் வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளமிட்ட இன்போசிஸ் நாராயண மூர்த்தி நாட்டின் பொருளாதாரம் குறித்தும், மன்மோகன் சிங் மற்றும் மோடி ஆட்சி குறித்தும் பேசியுள்ளார்.

இன்போசிஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை 0.19 சதவீதம் வரையில் சரிந்து 1,365.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இன்போசிஸ் பங்குகள் 28.04 சதவீதம் சரிந்துள்ளது.

மன்மோகன் சிங் பற்றி இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்ன சொன்னார் தெரியுமா..?

பெங்களூர் நிறுவனத்தை மூடும் டாடா.. ஊழியர்கள் நிலை என்ன..?!

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “அசாதாரண மனிதர்” அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான், ஆனால் அவரது தலைமையிலான UPA ஆட்சி இருந்த போதும் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின என்று பேசியுள்ளார்.

ஐஐஎம் கல்லூரி

ஐஐஎம் கல்லூரி

அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்லூரி மாணவர்களுடன் நாராயண மூர்த்திக் கலந்துரையாடிய போது நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

ஹெச்எஸ்பிசி
 

ஹெச்எஸ்பிசி

நான் லண்டனில் ஹெச்எஸ்பிசி நிர்வாகக் குழுவில் 2008 மற்றும் 2012 ஆண்டுக் காலகட்டத்தில் இருந்தேன் அப்போது சில ஆண்டுகளில், போர்டு ரூமில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி குறித்த ஆலோசனையில் சீனாவை இரண்டு மூன்று முறை குறிப்பிடும் போது இந்தியாவின் பெயர் ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படும் என்று நாராயண மூர்த்திக் கூறினார்.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

தற்போதைய அரசாங்கத்தை முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பல முக்கியமான விஷயங்களில் முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேலும் மேக் இன் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா ஆகியவற்றைக் கொண்டு வந்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பாராட்டினார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி.

இந்தியா

இந்தியா

மேலும் அவர் பேசுகையில் ஒரு காலத்தில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை இழிவாகப் பார்த்தார்கள், ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதை உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது இந்தியா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys Narayana Murthy says Manmohan Singh is an extraordinary man, but economic activities stalled in UPA

Infosys Narayana Murthy says Manmohan Singh is an extraordinary man, but economic activities stalled in UPA

Story first published: Saturday, September 24, 2022, 18:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.