டிடின்னு பெயர் வந்தது இப்படிதான்..தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

சென்னை : விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான டிடி, தனது பெயர் குறித்து சுவாரசியமானத் தகவலை கூறியுள்ளார்.

தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கை தேர்ந்தவர்.

தொகுப்பாளர்கள் எத்தனை பேர் புதுசு புதுசாக வந்தாலும் மக்கள் மனதில் இவருக்கு என்று தனி இடம் உண்டு.

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும்.. இன்றும்.. என்றும் ரசிகர்களின் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். தன்னுடைய திறமையாலும், சுட்டித்தனமான பேச்சாலும், அழகாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி.

ஸ்பெஷல் ஷோக்கள்

ஸ்பெஷல் ஷோக்கள்

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் நயன்தாராவை இன்டர்வியூ எடுத்திருந்தார். அதன் பின் ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமாஷனுக்காக ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை இன்டர்வியூ எடுத்தார்.

இப்படித்தான் அந்த பெயர் வந்தது

இப்படித்தான் அந்த பெயர் வந்தது

இந்நிலையில்,ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிடி, அப்போது தொகுப்பாளர் டிடின்னு பெயர் வந்தது எப்படி என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ஸ்கூல் படிக்கும் போதே டிடின்னு என்னை கூப்பிட ஆரம்பித்தார். ஸ்கூல் புக்கில் திவ்யதர்ஷினி என்று எழுத கஷ்டமாக இருந்ததால் டிடி என்று சுருக்கி எழுத தொடங்கினேன் அப்போதிலிருந்தே என்னை டிடி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், தொகுப்பாளினியான பிறகு என்னை டிடின்னு கூப்பிட்டது தொகுப்பாளர் தீபக் தான் அதன் பிறகு அதுவே நிறந்தரமாக ஆகிவிட்டது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.