வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தை சீன ராணுவம் கைப்பற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பர வி வருகிறது. ஆனால், அதன் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை.
சீன அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும் இருப்பவர் ஷி ஜின்பிங் உள்ளார். அந்நாட்டின் வலிமையான தலைவராக திகழ்ந்த அவர், கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பீஜிங் நகரம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 80 கி.மீ., நீளமுள்ள ராணுவ வாகனங்கள் பீஜிங்கை நோக்கி செல்கின்றன என கூறப்படுகிறது. வணிக போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜின்பிங்கின் கைது குறித்த தகவலும் பரவுகிறது.
மற்றொரு தகவலில் சீன முன்னாள் அதிபர், ஹூ ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
செப்.,16 ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கலந்து கொண்ட வந்த அவர், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், வீட்டு காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சீன தலைநகரில் ராணுவ வாகனங்கள் அதிக நடமாட்டம் இருந்ததாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அவரும் சீன அதிபர் கைதை உறுதி செய்யவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement