இந்தியாவில் மூன்லைட் விவகாரம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் நாட்டின் ஐடி துறை இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ஒருபக்கம் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய மூன்லைட்க்கு எதிராக நிற்கும் நிலையில் டெக் மஹிந்திரா, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேரன், 99 சதவீத ஐடி மற்ரும் டெக் ஊழியர்கள் மூன்லைட்டிங்-கிற்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த நிலையில் டிவிட்டரில் காரசாரமான விவாதம் துவங்கியுள்ளது.
வேலைக்கு ஏற்ற சம்பளத்தைக் கொடுத்தால் நாங்க ஏன் 2வதாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம் என ஊழியர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். ஊழியர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளும் நியாயமானவையாக விளங்குகிறது.
வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..!
ஐடி மற்றும் டெக் ஊழியர்கள்
டிவிட்டர் மற்றும் லின்கிடுஇன் தளத்தில் தற்போது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மூன்லைட்டிங் மற்றும் வொர்க் எதிக்ஸ் குறித்து அதிகமாகப் பேச துவங்கியுள்ளனர். இது தொடர்ந்து நடந்தால் அரசு களத்தில் இறங்கி முக்கிய முடிவை எடுக்க வேண்டி வரும் இல்லையெனில் டெக் ஊழியர்கள் தொடர்ந்து ப்ரீலான்சிங் செய்வது தொடரும்.
38 லட்சம் ரூபாய் சம்பளம்
விப்ரோ 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சி அளித்த நிலையில் டிவிட்டரில் சுபாக் கோஷ் என்பவர் ஒரு மணிநேர ப்ரிலான்சிங் பணிக்கு 100 டாலர், மாதத்திற்கு 40 மணிநேரம் பணியாற்றினால் கூட 4000 டாலர் ரூபாய் மதிப்பில் இது 3.20 லட்சம் ரூபாய். வருடம் 38 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும். டேலென்ட் இருந்தால் போதும் பணம் சாம்பாதித்து விடலாம்.
பிரஷ்ஷர்களின் சம்பளம்
2003-04 ஆம் ஆண்டில் ஐடி துறையில் பிரஷ்ஷர்களின் சம்பளம் 2.5-3 லட்சம் ரூபாய் சம்பளம். 2022ல்லும் 3-3.5 லட்சம் ரூபாய் தான். இதேபோல் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் 5-6 சதவீதம் இருக்கிறது, இப்படிப் பார்த்தால் தற்போது பிரஷ்ஷர்களின் சம்பளம் 6.5 – 7 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். சம்பளத்தை ஒழுங்கா கொடுத்தால் ஏன் 2வது நிறுவனத்தில் பணியாற்றப் போகிறார்கள் என அக்ஷத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சம்பள வித்தியாசம்
சம்பளத்தைப் பணி நியமன கடிதத்தில் பெரிதாகக் காட்டிவிட்டுக் கையில் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், போதுமான வருமானம் இல்லாத ஐடி ஊழியர்கள் கூடுதலான சம்பளத்திற்கு 2வது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பதை விளக்கம் வகையில் மீம் பகிரப்பட்டு உள்ளது.
பெரு நிறுவன தலைவர்கள்
இதேபோல் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் டிரஸ்ட்களில் உறுப்பினராகப் பணியாற்றுவது தவறு இல்லையே அதேபோல் தான் இதுவும். முதலில் பெரும் தலைவர்கள் ஒரு நிறுவனத்தில் மட்டும் பணியாற்றுவதை அதாவது மூன்லைட்டிங் செய்வதை நிறுத்த சொல்லுங்க என மேலும் சிலர் டிவீட் செய்துள்ளனர்.
Moonlight is dividing Indian IT Industry; Employees says pay better salary won’t moonlighting
Moonlight is dividing Indian IT Industry; Employees says pay better salary we won’t moonlighting