எய்ம்ஸ் தொடர்பாக அண்ணாமலையிடம் கேளுங்க என்று கை காட்டிய நட்டா!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரை வந்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பல்துறை நிபுணர்கள் மத்தியில் பேசிய போது மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் விரைவில் மோடி திறந்து வைத்தார் எனவும் பேசினார். இதனை பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டதுபகிரப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் எம்பி மாணிக்க தாகூர் மற்றும் மதுரை எம் பி சோ வெங்கடேசன் ஆகியோர் கட்சியினருடன் மதுரை திருப்பூரில் அமைய உள்ள வளாகத்தில் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது அங்கு எந்த கட்டிடம் இல்லாததால் “எங்கே நட்டாசொன்ன அந்த 95 சதவீத பணி? என கேட்டு சமூகவலைத்தமிழ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
இதற்கு பாஜக தரப்பில் இருந்து “மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான பூர்வாங்க பணி தான் 95 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும் என ஜெ.பி.நட்டா பேசினார். நட்டாவின் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுகவினர் விமர்சனம் செய்து வருகிறேன்” என்று ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து நட்டாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “எய்ம்ஸ் தொடர்பாக அண்ணாமலிடம் கேளுங்கள்” என கைகாட்டி விட்டு நீங்கி சென்றார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து தவறான தகவலை பாஜக தேசிய தலைமைக்கு தமிழக பாஜக சார்பில் அனுப்பப்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக அவர் அண்ணாமலையை கைகாட்டி விட்டு சென்றுள்ளார். இரண்டு நாள் நிகழ்ச்சிக்காக வந்த பாஜக தேசியத் தலைவரை ஒரே ஒரு குறிப்பு தவறாக பேசியதால் மொத்த சமூக வலைதளங்களிலும் அவரை கிண்டல் செய்யும் வகையில் மாற்றிவிட்டார் அண்ணாமலை என்றே சொல்ல வேண்டும்.
நட்டாவை அனைவரும் இப்படி விமர்சனம் செய்ய பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்பதால் தான் கைகாட்டி விட்டுச் சென்றாரா? அல்லது 20000 புத்தகங்களை படித்த நாம் தான் தேசிய பாஜக தலைவர் பதவிக்கு தகுதியான நபர் என்று இவ்வாறு அண்ணாமலை செய்தாரா? என்ற சந்தேகம் எழுகிறது என இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்