கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டார். பின், முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டார்.
இதேபோல், மிர்புர்காஸ் நகர மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு ஹிந்து சிறுமியும் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார்.இந்நிலையில், அதே நகரில் வசித்த மூன்று குழந்தைகளின் தாயான ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றியுள்ளனர்.
பின், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து, அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்து விட்டனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்தான் ஹிந்துக்கள அதிக அளவில் வசிக்கின்றனர். அதேபோல் கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணமும் இங்குதான் அதிகமாக நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement