புதுடெல்லி: தேசிய நீதிசார் தரவுத் தொகுப்பில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரத்தில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் கிரிமினல் வழக்குகள், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சிவில் வழக்குகள் ஆகும். இதில் உத்தரபிரதேசம் 41,210 வழக்குகளுடன் முதலிடத்திலும் மகாராஷ்டிரா 23,483 வழக்குகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன.
மேற்கு வங்கம் (14,345), பிஹார் (11,713) முறையே 3, 4-ம் இடத்தில் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் 91% இந்த 4 மாநிலங்களில் மட்டும் உள்ளன. மேகாலயா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப், சத்தீஸ்கர், அசாம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் நிலுவை வழக்குகள் 100-க்குள் உள்ளன. ஒடிசா (4,248), குஜராத் (2,826) ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கு மேலாக நிலுவையில் உள்ளன.