எடப்பாடி பழனிசாமி போட்ட ஸ்கெட்ச் – ஓ.பன்னீர்செல்வம் செம அப்செட்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம்

தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த

மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது.

கிட்டத்தட்ட 99 சதவீதம், அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்லலாம். எனினும், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தேர்தலை நடத்தி பொதுச் செயலாளர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால், அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன், அவர், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, தலைமைக் கழகத்திடம் இருந்து எந்நேரமும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருவது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தேர்தலுக்கு தடை விதிப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.