மிசோரமில் ரூ.167 கோடி மதிப்பு போதை மாத்திரை பறிமுதல்| Dinamalar

மிசோரமில், மியான்மர் நாட்டு எல்லை அருகே, கடத்திவரப்பட்ட ரூ.167 கோடி மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட ‘மெத்திலீன் டையாக்சி மெத்தாம்பிடமைன்’ என்ற போதை மாத்திரைகள் நேற்று முன் தினம் பறிமுதல் செய்யப்பட்டன.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் சோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மியான்மர் எல்லை அருகே, சம்பாய் மாவட்டத்தில் உள்ள மெல்புக் என்ற கிராமத்தில், மெத்தாம்பிடமைன் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அசாம் ரைபிள்ஸ் படையினரும், மாநில போலீசாரும் இணைந்து, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தில், கடத்தி எடுத்து வரப்பட்ட ஐந்து லட்சம் மெத்தாம்பிடமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்து அவற்றை கடத்திவந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.