இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
செப்டம்பர் 20-ஆம் திகதி நடந்த முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் முக்கியமான இரண்டாவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது, இதனால் ஒவ்வொரு அணிக்கும் மொத்தமாக 8 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா அதிரடி
ரோகித் சர்மா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
BCCI
இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா. இந்த நிலையில் இன்று அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.
இந்தியா வெற்றி
ரோஹித் ஷர்மாவுடன் முதலில் களமிறங்கிய விராட்கோலி 11 (6) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மூன்றாவதாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் மாறு ஒரு பவுண்டரி அடித்தார்.
இதன் மூலம் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று முன்னிலை வைத்துள்ளது. வரும் 25-ஆம் திகதி மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.