இந்தியாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங்கும் தொடங்கியது. ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகான ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் 38 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Thank you Fans for the amazing response on the #CaptainMiller Pooja glimpse
Watch it here incase you haven’t : https://t.co/XiCLkkYtxr@dhanushkraja @ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash @johnkokken1 @nivedhithaa_Sat pic.twitter.com/g1gdhdsPfP
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 25, 2022
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை 34 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்குகிறார். தேசிய விருது வென்ற இயக்குநருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
The CAPTAIN MILLER! pic.twitter.com/FXjPwHJ8VP
— LetsCinema (@letscinema) September 24, 2022
இதுவரை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் திரைப்படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு உரிமத்தில் இந்த அளவிற்கு விற்பனையானதில்லை என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.