அகில இந்திய
காங்கிரஸ்
கட்சி தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் போட்டியிட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழப்பம் நிலவி வருகிறது.
மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இந்த கூட்டத்தில் 18 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் பார்வையாளராக மல்லிகார்ஜூன் கார்கே கலந்துகொண்டார். இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் சரியான முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த முதவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுப்பார் என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெய்லாட் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.