இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கின. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும் எழத்தொடங்கின.
ஏற்கனவே அவர் திரைப்படம் தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அவர் தனது பதிவில் உற்சாகமான அறிவிப்பு என தெரிவித்திருந்ததால் ஒரு வேலை திரைப்படம் சம்மந்தப்பட்ட அறிவிப்பாக இருக்குமா என எதிர்பார்ப்புகளும் கிளம்பின.
ஒரு சிலர் தோனியின் அரசியல் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கருதினர். இந்நிலையில் இன்று 2 மணிக்கு நேரலை வந்த அவர், ஓரியோ பிஸ்கட்டுகளை ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.
இதனை லைவ்வில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஒன்றும் விளங்காமல் திகைத்து போனார்கள். கடையில் பார்த்தால் அது ஓரியோ பிஸ்கட் விளம்பரம் என தெரியவந்தது.இதனையடுத்து தோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
newstm.in