கடன் வழங்கும் ஆப்… கதறி அழுத சீரியல் நடிகை – அதிர்ச்சி வீடியோ

ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்துள்ளன. குறைந்த ஆவணங்களே தேவைப்படுவதால் கடன்களும் எளிதாக கிடைக்கின்றன. ஆனால் குறைந்த கால அவகாசம் மட்டும் கொடுத்துவிட்டு அதிக வட்டியும் வசூலிக்கின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பும் செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர், கதறி அழுத வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “எனது புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர். கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து அடையாளம் தெரியாத நபர்கள் எனக்கு போன் செய்து, ‘நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்’என கூறி குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து மோசமாக பேசி புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். என்னுடைய வாட்சப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள். இது குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம்” என்றார். தற்போது இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.