சென்னை: இளம் நடிகருடன் சீரியல் நடிகை ஒருவர் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டி பிரபலம் பேசியது தீயாய் பரவியது.
நடிகரும் நடிகையும் ரகசிய குடித்தனம் நடத்தி வருகின்றனர் என அந்த பிரபலம் அவதூறு கருத்துக்களை அடுக்கி இருந்தார்.
இந்நிலையில், மறைமுகமாக அந்த பிரபலத்துக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல நடிகை அளித்த பதில் சினிமா பிரபலம் ஒருவரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.
நடிகைகள் பற்றி
நடிகைகள் பற்றி படு கேவலமாக தொடர்ந்து பேசி வருகிறார் அந்த பிரபலம். சினிமாவில் மிகவும் நெருக்கமாக இருந்து வரும் அவர், சினிமா நடிகைகளை பற்றிய படுக்கையறை விஷயங்களை பேசியே பைசா பார்த்து வருகிறார். சில நடிகைகள் அவரது பேச்சை பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துள்ளனர். ஆனால், யாரும் இதுவரை அந்த பிரபலத்தின் மீது எந்தவொரு ஆக்ஷனும் எடுக்க முன் வரவில்லை.
நடிகருடன் குடித்தனம்
இந்நிலையில், சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவரை பற்றி மிகவும் மோசமாக அவர் பேசியிருந்தார். இளம் நடிகர் ஒருவருடன் ரகசிய குடித்தனம் நடத்தி வருகிறார் நடிகை என அவர் பேசியது இணையத்தில் காட்டுத் தீயாக பரவியது. சம்பந்தப்பட்ட அந்த நடிகை மற்றும் நடிகர் காதுக்கும் எட்டியது.
பிரிந்து விட்டனர்
இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும் இருவரும் தற்காலிமாக பிரிந்து விட்டதாகவும் அடுத்தடுத்து புகார்களை அந்த பிரபலம் அடுக்கி வந்தார். இந்நிலையில், மறைமுகமாக அந்த பிரபலத்துக்கு நடிகை கொடுத்துள்ள விளக்கம் நடிகைக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் ஒருவரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.
தப்பு பண்ணலனா
நடிகை எந்தவொரு தப்பும் செய்யவில்லை என்றால் பிறகு ஏன் பயப்பட வேண்டும் அவதூறு பரப்பிய பிரபலத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க வேண்டியது தானே.. அதை விட்டு விட்டு ஏன் இப்படி மறைமுகமாக பேசி மழுப்புகிறார் என இயக்குநர் ஒருவர் பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகர் அமைதி
ஆனால், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அந்த நடிகர் ரொம்ப தெளிவாகவே உள்ளார். அதனால், இதற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது போலவே அமைதி காத்து வருகிறார் என்றும் நடிகரையும் விட்டு வைக்காமல் திரையுலகில் புகைந்து வருகிறது.