இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாக் டிரேடிங் நிறுவனங்களில் ஒன்றான Zerodha, நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடல்நலனை சரியான அளவில் பேணுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு என அறிவித்துள்ளார்
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து வருவதால் அவர்களது உடல்நலம் முக்கியம் என்றும் உடல்நலம் தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்திவரும் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் போனஸ் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. zerodha வேற லெவல் !
ரூ.10 லட்சம் பரிசு
ஊழியர்களின் உடல்நலம் தொடர்பான முயற்சிகளில் நீண்டகாலமாக கவனம் செலுத்தி வரும் Zerodha, உடல்நலனை சரியானபடி வைத்திருக்கும் ஊழியர்களுக்கு போனஸை பெறும் புதிய சவாலை அறிவித்துள்ளது. இந்த சவாலில் வெற்றி பெறும் ஒரு அதிர்ஷ்டசாலி ஊழியர் ரூ.10 லட்சத்தை கூட வெல்ல வாய்ப்பு உள்ளது.
நிதின் காமத்
இதுகுறித்து Zerodha தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் அவர்கள் கூறியபோது, ‘ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பது தான் சவால் என்றும், இருப்பினும் இந்த இலக்கு மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளார். Zerodha நிறுவனத்தின் ஃபிட்னஸ் டிராக்கர்களில், தினசரி இலக்குகள் அமைக்கப்படும் என்றும், இந்த இலக்கில் 90%, நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை போனஸாக பெறுவார்கள்’ என்று நிதின் காமத் கூறினார்.
வீட்டிலிருந்து வேலை
வீட்டிலிருந்து வேலை செய்யும் போது சுறுசுறுப்பாக இருக்கவும், ஊழியர்களை ஊக்குவிக்கவும் தான் இந்த அறிவிப்பு என்று கூறிய நிதின் காமத், 25 க்கும் குறைவான உடல் நிறை குறியீட்டெண் (BMI) கொண்ட ஊழியர்களுக்கு போனஸாக அரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
கடும் எதிர்ப்பு
இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பு பாரபட்சமானது என்றும், பிஎம்ஐ தரநிலைகளை கட்டுப்படுத்தாதவர்களுக்கு செய்யப்படும் அநீதி என்றும் பலர் வாதிட்டனர்.
நிதின் காமத் விளக்கம்
ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு நிதின் காமத் விளக்கம் அளித்துள்ளார். உட்கார்ந்தபடியே வேலை செய்வது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் உடல்நலனை பாதிக்கும் அம்சமாக இருக்கும் என்றும், அனைவரையும் உடல்நலனை காக்கும்படி தூண்டுவதே இந்த யோசனையின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி
மேலும் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை கண்காணிக்க பிஎம்ஐ சிறந்த நடவடிக்கை அல்ல என்று எனக்குத் தெரியும் என்றும், ஆனால் இது ஒரு ஆரம்பம் என்றும், ஆரோக்கியத்தை கடைபிடிக்க ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சொந்த அனுபவம்
என்னுடைய சொந்த அனுபவத்தில் கொரோனா வைரஸ் லாக்டவுனின் போது, தான் அதிகம் சாப்பிட்டு உடல் எடை அதிகரித்ததாகவும், அதிகரித்த எடையை குறைக்க உடற்பயிற்சி செய்தேன் என்றும் காமத் கூறியுள்ளார்.
Zerodha employees Offers Rs 10 Lakh As Reward for latest fitness challenge
Zerodha employees Offers Rs 10 Lakh As Reward for latest fitness challenge | இதை செய்தால் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு.. ஜீரோதா சி.இ.ஓவின் போனஸ் அறிவிப்பு!