உள்நாட்டு வழித்தடங்களை விரிவுபடுத்தும் ஆகாசா.. மேலும் 2 நகரங்களுக்கு சேவை!

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆகாசா நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கிய ஆகாச விமானம் தற்போது படிப்படியாக தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இரண்டு புதிய வழித்தடங்களில் தனது சேவையை தொடங்க இருப்பதாக ஆகாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் 60% வரை உயர்ந்த சம்பள உயர்வு.. ஆகாசா பைலட்டுகளுக்கு ஜாக்பாட்!

ஆகாசா ஏர்லைன்ஸ்

ஆகாசா ஏர்லைன்ஸ்

ஆகாசா ஏர்லைன்ஸ் அதன் உள்நாட்டு தடங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அடுத்த மாதம் முதல் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் விமான சேவைகளை விரிவுபடுத்துவதாக ஆகாசா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கெளஹாத்தி - அகர்தலா

கெளஹாத்தி – அகர்தலா

ஆகாசா ஏர்லைன்ஸ் வரும் அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும் அகர்தலா ஆகிய இரண்டு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம்
 

கட்டணம்

இந்நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, அக்டோபர் 21 முதல் பெங்களூரில் இருந்து கெளஹாத்தி செல்ல பயணிகளுக்கு ரூ.8,644 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் கெளஹாத்தி மற்றும் அகர்தலா இடையே ரூ. 3,002 முதல் கட்டணத்தில் நேரடி விமானத்தை இயக்கவுள்ளது.

கெளஹாத்தி - பெங்களூரு

கெளஹாத்தி – பெங்களூரு

​​கெளஹாத்தி – பெங்களூரு வழித்தடத்தில் இண்டிகோ, ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகியவை நேரடி விமானங்கள் மூலம் சேவை செய்து வருகின்றன. அகர்தலா-குவஹாத்தி வழித்தடத்தில் இண்டிகோ மற்றும் ஃப்ளைபிக் ஏர்லைன்ஸ் நேரடி விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பிரபல தொழிலதிபர் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களின் ஆசியுடன் ஆகாசா ஏர் தனது நெட்வொர்க்கில் ஆறாவது இடமாக டெல்லியை சமீபத்தில் இணைத்தது. அதேபோல் இந்நிறுவனம் அகமதாபாத், பெங்களூரு, கொச்சி, சென்னை மற்றும் மும்பை நகரங்களுக்கும் சேவை செய்து வருகிறது.

250 விமானங்கள்

250 விமானங்கள்

ஆகாசா ஏர் விமான நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி செயல்பட தொடங்கியது என்பதும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 9 வழித்தடங்களுடன் வாரத்திற்கு 250 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Akasa Air to Begin Flights to Guwahati, Agartala from October

Akasa Air to Begin Flights to Guwahati, Agartala from October | உள்நாட்டு வழித்தடங்களை விரிவுபடுத்தும் ஆகாசா.. மேலும் 2 நகரங்களுக்கு சேவை!

Story first published: Monday, September 26, 2022, 7:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.