'காவல் துறைக்கு வேகம் பத்தல'- அதிரடி காட்டும் அண்ணாமலை!

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையை சேர்ந்த ’அரண் பணி அறக்கட்டளை’ என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆன்மீக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழா மேடையில் அண்ணாமலை பேசியதாவது:

“கடந்த 20 ஆன்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பியிறுக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்மீகத்திற்கான ஆதாரம் கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி கேட்கிறார்கள், சனாதன தர்மத்திற்கு அழிவே கிடையாது.

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சனாதன தர்மம் குறித்து திரித்து கூறி பொய் கூறி வருகிறார்கள். முதலும் இல்லை முடிவும் இல்லை எக்காலத்திலும் சனாதன தர்மத்திர்கு அழிவில்லை . 5000 ஆண்டுகளாக சனாதன தர்மம் உள்ளது. 20 ஆன்டுகளாக தமிழகத்தில் எதிர்க்க துவங்கியிருக்கிறார்கள்.

கைது பண்ணுங்க பார்க்கலாம்; ஆவேசமான அண்ணாமலை !

சனாதனத்தை காப்பாற்ற கூடியவர்தான் நாட்டின் காவலனாக இருக்க முடியும், மோடி அவ்வாறு இருக்கிறார். சிவனடியார்கள் போல என்னால் இருக்க முடியவில்லை. ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தை காட்டக்கூடிய நிலையில் நான் இல்லை , சத்ரியனாக இருக்கிறேன்” இவ்வாறு கூறினார்.

பின்னர் திருப்பூர் ஜெய் நகர் பகுதியில் கல் வீசி தாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பிரபு வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை அங்கு செந்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழகம் அமைதி பூங்காவாக மாற காவல்துறை முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும், தமிழக காவல்துறை தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும், காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த குற்றம் தடுக்கப்படும்” என்றார். செப்டம்பர் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு சிரித்துக் கொண்டே அதில் என்ன சந்தேகம் என்று பதிலளித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.