ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று Zomato என்பதும் இந்த நிறுவனம் சிறப்பான சேவை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்று திடீரென Zomato நிறுவனத்தின் செயலி வேலை செய்யவில்லை என்றும் அதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Zomato நிறுவனத்தின் சர்வரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு உண்டாகி உள்ளது என்றும், இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!
Zomato நிறுவனம்
இந்தியாவின் பிரபலமான உணவு விநியோக தளமான Zomato ஆன்லைன் உணவு ஆர்டர்களை பெற முடியாமல் சமீபத்தில் முடங்கியது. ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய முடியாமல் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முழுவதும் பல நகரங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நேரத்தில் Zomato சர்வர் செயலிழந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Zomato விளக்கம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாங்கள் தற்போது ஆன்லைனில் ஆர்டர்களை ஏற்கவில்லை என்றும், விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு திரும்பவும் ஆர்டர்களை பெறும் என்று செய்திகள் வெளியானாலும், Zomato நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை
டெல்லியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் உணவு தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கடுமையான போக்குவரத்து நெரிசல்கள், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பள்ளங்கள் ஆகியவைகளால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் இருப்பதால் ஆன்லைனில் தான் உணவுகளை ஆர்டர் செய்து சமாளித்து வருகின்றனர். ஆனால் தற்போது Zomato செயலி செயல்படாததால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள்
டெல்லியில் கனமழை பெய்ததன் காரணமாக, உணவு விநியோக தளமான Zomato, உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் மற்றும் கடினமான போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக Zomato அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு சேவை
இருப்பினும் இந்த கடினமான நேரத்தில் சேவை செய்ய நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்றும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறேனும் சேவை செய்ய உள்ளோம் என்றும், தாமதம் உள்ளிட்ட குறைகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் Zomato நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Zomato server down, Customers Unable To Order Food Online!
Zomato server down, Customers Unable To Order Food Online! | திடீரென ஆர்டர் செய்ய முடியாமல் திணறிய வாடிக்கையாளர்கள்.. என்ன ஆச்சு ஜொமாட்டோவிற்கு?