நாங்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என்றும், இந்த தேசத்தின் எதிரிகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை குறிவைத்து தாக்குகின்றனர் என்றும் திண்டுக்கல்லில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார்.
சமீப நாட்களாக பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் நேற்று பாஜக நிர்வாகி செந்தில்பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சம்பவ இடத்தை பார்வையிட வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மிக வருத்தத்திற்குரிய சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை குறி வைத்து அவர்களது வாகனங்களை தீவைத்து எரிக்கக்கூடிய சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திண்டுக்கல்லில் ஒரு கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அவை பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் அவர்களுக்கு சொந்தமான வாகனங்கள். இதேபோல் மதுரையில் ஆர்.எஸ். எஸ் நிர்வாகியின் வாகனம் ஏரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இது கட்சி அரசியல் பேசுகிற நேரமுமல்ல, நமக்குள் இருக்கின்ற சின்ன சின்ன பிரச்னைகளை பேசுகின்ற நேரமும் அல்ல. முழுக்க காவல்துறைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாச்சனையின்றி அவர்களை கைது செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த தேசத்தின் எதிரிகளின் இலக்கு இந்த தேசம் தான் பிஜேபியோ ஆர்.எஸ்.எஸ் கிடையாது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இந்த தேசத்தின் காவலர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதன் காரணமாகவே எங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன.
மேலும் தமிழகத்தில் இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு திமுக அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். நாடு முழுவதும் NIA சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் இது போன்ற வன்முறைகள் நடக்கிறது என்றால் அதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டது இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் பொறுப்பு எடுத்து இந்த சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திருமாவளவன் வாக்கு பெற்று பாராளுமன்ற உறுப்பினரான உடன், அவர் வாக்களித்த முதல் வாக்கு NIAவை பலப்படுத்த வேண்டும் என்பதே. தேசிய புலனாய்வு முகமை இதற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை முதலில் ஆதரித்தவர் திருமாவளவன் தான். மற்றும் அனைத்து திமுக எம்பிகளும் இதனை ஆதரித்தார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு ஆதரவாக வாக்களித்த திருமாவளவன் தற்பொழுது இந்த சோதனை கூடாது என கூறுவது சரி கிடையாது என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM