இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்ந்து பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. பணவீக்கத்தின் மதிப்பானது தற்போது 7% என்ற லெவலில் காணப்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இலக்கு 6% ஆக உள்ளது.
ஆக மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு சரிவானது வர்த்தக பற்றாக்குறையை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..!
ரிசர்வ் வங்கி கூட்டம்
தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற சூழலே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருளுக்கு கூடுதல் செலவு
இந்தியா தனது மொத்த நுகர்வில் 85% கச்சா எண்ணெயினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. இதே கேஸ் நுகர்வில் 50%மும் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகின்றது. ஆக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய் மதிப்பால், இந்தியா கூடுதலாக செலவிடும் நிலைக்கு தள்ளப்படலாம். ஏற்கனவே சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் எரிபொருள் விலைகள் உச்சத்திலேயே காணப்படுகிறது.
வர்த்தக பற்றாக்குறை
இதனால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையானது மேற்கோண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையானது 27.98 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் மற்ற எரிபொருட்கள் இறக்குமதியானது 17.7 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 87.44% அதிகமாகும்.
அன்னிய செலவாணி கையிருப்பு
இதற்கிடையில் இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பானது செப்டம்பர் 16 உடன் முடிவடைந்த வாரததில் 5.219 பில்லியன் டாலர் குறைந்து, 545.652 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 550.87 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ரூபாயின் சரிவினால் இதில் மேற்கொண்டு அழுத்தம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 100 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் தேவை குறையலாம் என்ற நிலைக்கு மத்தியில் விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
சமையல் எண்ணெய் விலை?
கச்சா எண்ணெய் மட்டும் அல்ல, சமையல் எண்ணெய் இறக்குமதியிலும் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய்-யினை இறக்குமதி செய்து வருகின்றது. ஆக ரூபாயின் சரிவானது இதன் விலையையும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல கமாடிட்டிகள் விலை அதிகரிக்கலாம்
வெஜிடபிள் எண்ணெய் இறக்குமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 41.55% அதிகரித்து, 1.89 பில்லியன் டாலர் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. ஆக இதுவும் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி செயப்படும் பல கமாடிட்டிகள் விலை அதிகரிக்க, ரூபாய் சரிவானது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Depreciating rupee may increase the prices of many commodities including crude oil
Depreciating rupee may increase the prices of many commodities including crude oil/தொடர்ந்து வீழ்ச்சி காணும் ரூபாய்.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்.. !