தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற, பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஒபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ரமேஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து வழக்கமாக செல்லகூடிய நேரத்திற்கு திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தது.
அங்கிருந்து பயனிகளை ஏற்றிக்கொண்டு கோவை செல்லவதற்காக தயார் நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்துன் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளரான பாஜக பிரமுகர் ரமேஷ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்று குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டனர். தூத்துக்குடியில் பயணிகள் ஏற்றி சென்ற தனியார் பேருந்தான பாரதிய ஜனதா கட்சி பிரமுகருக்கு சொந்தமான பேருந்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.