டாக்கா : வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எட்டு குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய பலரை தேடும் பணி நடந்து வருகிறது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிப்போர் நேற்று மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பேர் பயணித்தனர். நடு ஆற்றில் சென்ற போது படகு திடீரென கவிழ்ந்தது.
அதில் இருந்த பயணியர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் எட்டு குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்; மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. அதிக பாரம் ஏற்றியதால் படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.நவராத்திரி விழா இன்று துவங்குவதை முன்னிட்டு, நுாற்றாண்டுகள் பழமையான போடேஸ்வரி கோவிலுக்கு செல்வது, வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்து சமூக மக்களின் வழக்கம். கோவிலுக்கு சென்றவர்கள் உயிரிழந்தது, வங்கதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement