எச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வார்னிங்!

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிதியாக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினார்.

விழாவில் எம்.பி

பேசியதாவது:

“அக்டோபர் 2-ம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை ஆனால் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பானது மத ஊர்வலத்தை முன்னெடுத்து இருக்கிறது. இது சமூகத்திற்கும் சமூக கோட்பாட்டிற்கும் எதிரானது.

அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க பேரணியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற வேண்டும்.

தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் மத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். மத ஊர்வலம் நடைபெற்றால் சமூக சமய கோட்பாட்டிற்கு எதிராகவும் மதக் கலவரங்களை தூண்டும். இதனால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது:

“எச்.ராஜா அவர்கள் தொடர்ந்து விசிகவை சீண்டி வருகிறார். விசிகாவை தொடர்ந்து தீயசக்தி என விமர்சனம் செய்கிறார். தொடர்பு இல்லாத பிரச்சினையில் எல்லாம் எங்களைத் தொடர்புப்படுத்துகிறார். விசிகவின் மீதும், நாங்கள் பேசும் அரசியல் மீதும் எந்த அளவிற்கு அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

தமிழ்நாட்டை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வெறுப்பு அரசியலின் துணையால் வன்முறை காடாக்க வேண்டும் என்பது தான் எச்.ராஜாவின் நோக்கம். அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் இயக்கமாக அவர்களை கண்டிக்கும் விதமாக அவர்களுக்கு எதிராக மக்களை உருவாக்கும் இயக்காமாக விடுதலை சிறுத்தை கட்சி இயங்குகிறது.

அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதனால் அவருடைய காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறார். அதனை நான் ஏற்கவில்லை. திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது மூலமாக ஊடக வெளிச்சத்தில் இருக்கலாம் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். அதனாலேயே பாஜக தலைவர்கள் ஆளும் திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் திமுக அரசினை நாங்கள் தான் எதிர்க்கிறோம் என்றும் திமுகவிற்கு அடுத்த இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதன் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறார்கள். திமுக- பிஜேபி என்ற அரசியலை மாற்றி அமைக்க வேண்டும் என்ற சாதி திட்டமிட்டு செயல்படுகிறார்கள்” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.