இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவது ஏன்?

இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தங்கள் தொழிலைத் தொடங்கி வருகின்றன.

குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது.

ஆனாலும் இந்த்ய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே வெளிநாடுகளில் பதிவு செய்வது ஏன்?

பைஜூ ரவீந்தரன், நிதின் காமத், குனால் ஷா.. மாஸ் காட்டும் ஸ்டார்ட் அப் யூத் தலைவர்கள்..!

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

இந்தியா ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்க ஏற்ற நாடு என நாம் பெருமையாக கூறி வந்தாலும், சமீப காலமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பல போர்ச்சுகல், மால்டா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவற்றை பதிவு செய்கின்றனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படும் போது அவர்களின் மூலதனத்தில் ஒரு பகுதி பயன்படுத்த முடியாத படி பூட்டப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் அப்படி இல்லை. மேலும் வணிகம் மற்றும் திறன் அடிப்படையிலான விசாக்கள் போன்றவை இவர்களை அதிகளவில் ஈர்க்கின்றனர் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 வணிகச் சூழல்
 

வணிகச் சூழல்

மேலும் ஸ்டார்ட்-அப்களுக்கு, நட்பான வணிகச் சூழல், மலிவான மூலதனம் மற்றும் திறமைக்கான எளிதான அணுகல் போன்றவையும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்ய முக்கிய காரணங்களாக உள்ளன.

என்ன துறைகள்?

என்ன துறைகள்?

இப்படி இந்தியாவில் தொடங்க இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பதிவு செய்துள்ள துறைகள் எவை என்ற பார்த்தால் கிரிப்டோ, நிதி சேவைகள் மற்றும் இணையதளம் சார்ந்த வணிக நிறுவனங்களாக உள்ளன. பல வணிகர்கள் தேர்வு செய்யும் முக்கிய நாடுகளாகச் சிங்கப்பூர் மற்றும் யூஏஇ ஆக உள்ளது என ஹென்லே & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட்-அப் விசா

ஸ்டார்ட்-அப் விசா

தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அதிகாரம் இருப்பதால், கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் ஸ்டார்ட்-அப் விசாக்ள் மூலம் அவர்களை ஈர்க்கின்றன. “இந்தியாவில் பலர் இங்கிலாந்து மற்றும் கனடா தொடக்க விசாக்களுக்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளது. அவற்றை தடுக்க ஒரு புதுமையான யோசனை தேவை, அதை வணிகமாக மாற்ற முடியும்,” என்கிறார் Y-Axis Middle East DMCC, குடியேற்றம் மற்றும் விசா இயக்குனர் கிளின்ட் கான்.

யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

இந்தியர்கள் வெளிநாடுகளில் பதிவு செய்து 2021 மற்றும் 2022-ம் ஆண்டு தொடங்கிய பல நிறுவனங்கள் குறுகிய காலத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றும் யூனிகார்ன் ஸ்டார்ட் நிறுவனம் என்ற அந்தஸ்த்தையும் பெற்றுள்ளன. இதில் Polygon, Amagi, CommerceIQ, Hasura, Fractal Analytics, BrowerStack, Chargebee, InnovAccer, MindTickle உள்ளிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் அடக்கம்.

வரிகள்

வரிகள்

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான மதிப்பீட்டு விதிகள், தன்னிச்சையான வரி விதிகள் பெரும் பிரச்சனையாக உள்ளன. சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் இப்படி சிக்கல் இல்லை. தனிநபர் வரியும் இங்கு எல்லாம் குறைவாக உள்ளது என இந்தியாவிலிருந்து 2016-ம் ஆண்டு துபாய் குடிபெயர்ந்த edtech ஸ்டார்ட் அப் நிறுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Indian start-ups Are Registering Overseas and not in India?

Why Indian start-ups Are Registering Overseas and not in India? |இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவது ஏன்?

Story first published: Monday, September 26, 2022, 10:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.