ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோதையார் வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே கோலஞ்சிமடம் பகுதியியை சேர்ந்தவர் அபிஷா, இவருக்கு வயது 19 ஆகும். இவர் கர்ப்பமாகி தலைபிரசவத்திற்க்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண்மணியை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானது. இதனால் ஓட்டுநர் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார்.

அவசரகால மருத்துவர் சுஜின் ராஜ் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாட்டமுள்ள பகுதியில் அந்த இரவில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மருத்துவ சிகிச்சை அளித்து தாயும், சேயும்தற்போது பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.