இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் முக்கியமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள், புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் அந்தந்த துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.